fbpx
Connect with us

என்னை ஏமாற்றிய சூரரைப்போற்று.. படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன முக்கிய பிரபலம்!

suriya-sooraraipottru

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னை ஏமாற்றிய சூரரைப்போற்று.. படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன முக்கிய பிரபலம்!

அமேசானில் நாளை வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் திடீரென பிரபலம் ஒருவர் படம் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவர் கூறியதன் அர்த்தமே வேறு. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

ஒரு விமான உரிமையாளரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள சூரரைப்போற்று படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலில் அக்டோபர் 30-ஆம் தேதி சூரரைப்போற்று அமேசான் தளத்தில் வெளியாக இருந்த நிலையில் இடையில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சூரரைப்போற்று படம் சில பல பிரபலங்களுக்கு பட வெளியீட்டுக்கு முன்னரே போட்டுக் காட்டியுள்ளனர்.

சூர்யாவின் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேல் என்பவர் சமீபத்தில் சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு,

அவர் கூறியதாவது, படத்தில் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் தியேட்டரில் வெளியாக வில்லையே என்ற சோகம் தனக்கு இருப்பதாகவும் அது தனக்கு பெரிய ஏமாற்றம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது தற்போது சூரரை போற்று படத்தின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

soorarai-pottru-1

soorarai-pottru-1

Continue Reading
To Top