சூரரைப் போற்று அப்டேட் வெளியானது.. ஏமாற்றத்தில் சூர்யா ரசிகர்கள்

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் சூர்யாவின் 38 வது படத்தை இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. பல மாதங்களாக ப்ரொடக்ஷனில் உள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக வைட்டிங்கில் இருந்தனர். பொறுமை இழந்த அவர்கள் WE WANT SOORARAI POTTRU UPDATE என ஹாஷ்டாக் இட்டு ட்ரெண்ட் செய்தனர்.

நேற்று இப்பட அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே. போஸ்டர், டீஸர், சிங்கில் பாடல் என எதாவது வெளியாகும் என எதிர்பார்த்தால், படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 10 வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

soorarai pottru

இதனால் சூர்யா ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றமே மிச்சம்.

Leave a Comment