சூரரைப் போற்று கொடுத்த தைரியம்.. ஹீரோவாக உருவெடுத்த காமெடி நடிகர்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இப்போது வரை இந்த படத்தின் வெற்றியை தடுக்க ஆளில்லை.

தினமும் சூரரைப் போற்று படம் ஒரு சாதனையை செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூரரைப் போற்று படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

கடந்த சில வருடங்களாகவே தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த சூர்யா சூரரைப்போற்று படத்தின் மூலம் தனது கேரியரை உச்சத்திற்கு தூக்கிச் சென்று விட்டார். மேலும் இந்த படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி என்ற நடிகைக்கும் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த சில கதாபாத்திரங்கள் ஒன்றுதான் காளி வெங்கட் நடித்த கதாபாத்திரம். இயல்பாக நகைச்சுவை செய்வதில் கில்லாடி.

சூரரைப் போற்று படத்தில் அவரது கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை அமலாபால் நடித்த ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் என்பவர் தயாரிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் காளி வெங்கட் ஜோடியாக மெட்ராஸ் பட புகழ் பிரித்விகா நடிக்கவுள்ளார். ஊரடங்கு முடிந்தவுடன் அந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

kaali-vemkat-cinemapettai
kaali-vemkat-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்