Connect with us
Cinemapettai

Cinemapettai

sudha-kongara-suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூரரைப்போற்று ட்ரெய்லரில் தெறிக்கும் வசனங்கள்.. அதற்கு காரணம் இந்த இயக்குனர் தான்!

ஊர் முழுக்க சூரரைப்போற்று படத்தின் டிரெய்லரை பற்றிதான் பேச்சுக்கள் அதிகமாக இருக்கிறது.

பேசுற அளவுக்கு செம வெயிட்டாக வந்துள்ளது சூர்யாவின் சூரரை போற்று ட்ரெய்லர்.

ட்ரெய்லரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடன் வாங்கியாவது அமேசான் பிரைம் தளத்தில் அக்கவுண்ட் வாங்கி விடுவார்கள் போல நம்ம ஆட்கள்.

இது ஒருபுறமிருக்க சூரரைப்போற்று படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதிலும் வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா, ஓ**தா பிலைட்ட கீழ இறக்குடா பார்த்துக்கலாம் என்ற வசனம் புல்லரிக்க வைத்துள்ளது.

இதற்கு காரணம் உரியடி படங்களை இயக்கிய விஜயகுமார் என்ற இளம் இயக்குனர் தானாம்.

சூரரை போற்று படத்திற்கு வசனங்கள் அவர்தான் எழுதியுள்ளதால் இன்னும் தெறிக்க விடப் போகும் வசனங்கள் அதிகமாக இருப்பதாக தற்போது கூறிவருகின்றனர்.

சூர்யாவின் ஆறு வருட வெற்றி தவத்திற்கு சூரரைப்போற்று நிச்சயமாக பெரிய விலை கொடுக்கும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

suriya-sudha-cinemapettai

suriya-sudha-cinemapettai

Continue Reading
To Top