Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய அளவில் ராட்சசன் பட சாதனையை தூக்கி சாப்பிட்ட சூரரைப் போற்று.. மாஸ் காட்டும் சூர்யா!
சூர்யாவின் நீண்டகால தவிப்புக்கு பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது சூரரை போற்று. கடந்த சில வருடங்களாக சூர்யா தோல்வியை மட்டும் தான் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படம் விமர்சக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அளவில் ராட்சசன் பட சாதனையை ஓரங்கட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன்.

ratchasan-cinemapettai
இந்த படம் இந்திய அளவில் அதிக IMDB ரேட்டிங் பெற்ற படங்களில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் சூரரைப்போற்று படம் அதை ஓரம் கட்டி விட்டது.
8.4 ரேட்டிங் மதிப்பை பெற்ற ராட்சசன் படத்தை ஓரம்கட்டி சூரரை போற்று படம் 9 ரேட்டிங் மதிப்பு பெற்றுள்ளது.

soorarai-pottru-cinemapettai
தற்போது சூரரைப்போற்று படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
