Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப்போற்று படத்தை கண்மூடி தனமாக விமர்சித்த சினிமா பிரபலங்கள்.. தீயாய் பரவும் ட்விட்டர் பதிவுகள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.
தற்போது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யாவின் அசரவைக்கும் நடிப்பில் தயாரான சூரரைப்போற்று படம் கொரோனவைரஸ் காரணமாக இன்று நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், மோகன்பாபு, ஊர்வசி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்தினை மெருகேற்றி உள்ளனர்.
மேலும் படத்தின் கதை களமும் சூர்யாவின் நடிப்பும் தாறுமாறாக இருக்கிறது என்று பலர், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ‘ரஜினிகாந்தின் படத்திற்கு அடுத்ததாக மூன்று மொழிகளில் ரிலீஸான ஒரே படம் சூரரைப்போற்று தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ஆர்ஜே பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சூரரைப்போற்று குழுவிற்கும் சூர்யாவிற்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார்.
இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 70 மில்லி மீட்டர் திரையில் இந்த படத்தை காண வருத்தமாய் இருக்கிறது என்றும், இது மிக அருமையான படம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஜீவி பிரகாஷின் இசை நெருப்பாய் தெறிக்கிறது என்றும் பதிவிட்டிருக்கிறார் பிரியா.
இவர்களை அடுத்து ஆர்யா, சூர்யாவின் மீதிருந்து தன்னுடைய கண்ணை எடுக்க முடியவில்லை என்றும், ஹேட்ஸ் ஆப் யு சார் என்றும் பதிவிட்டு மொத்த படக்குழுவினருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்து இருக்கிறார்.
இந்தப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு சூர்யாவின் நடிப்பிற்கும் சுதாவின் தாறுமாறான இயக்கத்திற்கும் மகுடத்தை சேர்த்துள்ளது.
