வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரிஸ்க் வேண்டாம்னு அமரன் படத்தில் இருந்து விலகிய சோனி.. கமலுக்கு கூட சொந்தம் இல்லாத பங்கு

சிவகார்த்திகேயனின் அமரன் படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு பல பிரச்சினைகள் நிலவி வந்தது. ஆரம்ப கட்டத்தில் அமரன் படத்தை சோனி நிறுவனமும், கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தான் தயாரித்து வந்தது. காஷ்மீர் ராணுவத்தின் பயிற்சி முகாமில் சூட்டிங் நடைபெற்றது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வந்த இந்த படத்திற்கு நாளுக்கு நாள் பட்ஜெட் அதிகமாகி கொண்டே போனது. ஒரு கட்டத்தில் சோனி மற்றும் கமல் இருவரும் இந்த படத்தை நம்பாமல் பட்ஜெட்டை குறைக்கும் படி கூறினார்கள். ஆனால் காஷ்மீரில் படம் நடைபெற்றதால் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானது.

இதனிடையே கமல் மற்றும் சோனி நிறுவனத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு சோனி நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கியது. அதன் பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் மகேந்திரன் இதில் களமிறங்கினார். அவர்தான் பல இடங்களில் இருந்து இந்த படத்திற்கு பைனான்ஸ் வாங்கி சோனி நிறுவனத்திற்கு செட்டில் செய்தார்.

ஒரு கட்டத்தில் சோனி நிறுவனம் செய்த செலவு முழுவதுமாக மகேந்திரன் சரி கட்டி விட்டார். இப்பொழுது அமரன் படம் நல்ல வசூல் செய்து வருகிறது முதல் நாளில் மட்டும் பத்தரை கோடிகள் வசூல் ஆகியுள்ளது. இன்னும் இந்த படம் பெரும் தொகையை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் இரண்டிலும் நல்ல பிசினஸ் வந்துள்ளது.

அமரன் படத்தை ஒரு கட்டத்தில் நம்பாமல் ,ரிஸ்க் வேண்டாம் என கமலும் கூறி வந்தார் ஆனால் மகேந்திரன் மட்டும் அசராமல், கிடைத்த இடங்களில் இருந்து நிதியை திரட்டி சாதித்து விட்டார். இப்பொழுது இந்த படத்தின் வசூலில் கமலுக்கு கூட பங்கு கிடையாது. முழுக்க முழுக்க தனி ரிஸ்க் எடுத்து மகேந்திரன் தான் எல்லாத்தையும் பார்த்து கொண்டார்.

- Advertisement -

Trending News