Connect with us

Cinemapettai

2018 யூ – 19 உலகக்கோப்பையில் விளையாடும் முன்னாள் வீரர்களின் வாரிசு இவர்கள் தான்.

Cinema News | சினிமா செய்திகள்

2018 யூ – 19 உலகக்கோப்பையில் விளையாடும் முன்னாள் வீரர்களின் வாரிசு இவர்கள் தான்.

ஜூனியர் உலகக்கோப்பை அதாவது 19 வயதுக்கு உட்பட்டவர்கள் விளையாடும் போட்டிகள். இந்த வருடம் இப்போட்டிகள் ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 4  வரை நியூஸிலாந்தில் நடைபெறுகிறது.  இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றனர்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது முன்னாள் வீர்களின் மகன்கள் யார் இந்த உலகக்கோப்பையில் விளையாடுகின்றனர் என்று தான் ..

மக்காயா நின்டணி மகன் தாண்டோ

makhaya ntini

முன்னாள் தென் ஆப்பிரிக்கா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
வேகப் பந்துவீச்சாளர் மக்காயா நின்டணி யின் மகன் தாண்டோ. 17 வயதான இவர் ஆல் ரௌண்டார் ஆவார். இவர் வலது கை பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன். தன் தந்தை போலவே வேகமாக பந்து வீசுவதில் கில்லாடி.

Thando

இவர் நம் இந்திய கேப்டன் விராட் கோலியை தனது இன்சிப்ரஷன் ஆக கொண்டுள்ளார்.

ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின்

austin waugh

முன்னாள் ஆஸி கேப்டன் ஸ்டீவ் போல அவரது மகனும் ஆல் ரவுண்டர் தான். பேட்டிங், பௌலிங் என்று இரண்டு துறையிலும் அசத்தும் இவர் நல்ல பீல்டர் கூட. மறைந்த முன்னாள் ஆஸி வீரர் பில் ஹூஜ்ஸ் தான் இவரின் ரோல் மாடல். நம் இந்திய வீரர் ஹர்டிக் பாண்டியா போல் உள்ளது இவரது கேம் ஸ்டைல்.

Sachin Tendulkar – Steve Waugh

ஜேம்ஸ் சதர்லேண்ட் மகன் பில்

தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சி இ ஓ ஜேம்ஸ். இவர் சர்வேதச கிரிக்கெட் விளையாட வில்லை. வேகப்பந்து வீச்சாளரான இவர் விக்டோரியா அணிக்காக விளையாடியவர். எனினும் லெவல் 3 கோச்சிங் முடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் நிர்வாகத்தில் கை தேர்ந்தவர்.

Bill Sutherland

இவர் மகன் பில் சதர்லாண்டும் ஆஸ்டின் வாக் போல் ஆல் ரௌண்டார் தான். இவர் இதற்கு முன்பே உள்ளூர் லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். ஷனே வாட்சன் தான் இவர் ரோல் மாடல்.

சினிமாபேட்டை கிசு கிசு

arjun tendulkar

18 வயதான சச்சின் அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் தான் கிளப் கிரிக்கெட்டில் டி 20 போட்டியில் விளையாடி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் ஒபெனராக காலம் இறங்கிய இவர் 48 ரன்கள் எடுத்தார். மேலும் 4 விக்கெட்களையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்திய அணியில் இடம் பெற வில்லை என்பது சற்றே ஆச்சிரியம் கலந்த உண்மை தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top