Tamil Cinema News | சினிமா செய்திகள்
சோனியா அகர்வாலுக்கு பதிலாக 7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.. தப்பித்த பிரபல நடிகை
செல்வராகவன் இயக்கிய ஒரு சில சூப்பர் ஹிட் படங்களில் 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இந்த படம் அன்றைய கால இளைஞர்கள் முதல் இன்றைய கால இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது.
செல்வராகவன் படங்களில் காதல் காட்சிகள் மிகவும் கசமுசாவாக தான் இருக்கும். அதேபோல் படத்தின் எமோஷனல் காட்சிகளும் பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.
அந்த வகையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் அப்பா மகன் ஆகிய இருவருக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மிக அழகாக சொல்லியிருப்பார். அந்த காட்சிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் அடிமைதான்.
அந்த படம் வெளியான பிறகு தனக்கு அனிதா போன்ற பெண் தான் மனைவியாக வரவேண்டும் என பல இளைஞர்கள் தவமாய் தவம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி அனிதாவாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர் சோனியா அகர்வால். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சுப்பிரமணியம் ஸ்வாதி தானம்.

swathi-reddy-cinemapettai
செல்வராகவனின் படங்களில் தொடர்ந்து நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்டு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியபுரம் ஸ்வாதி, அனிதா கதாபாத்திரத்திற்கு சிறப்பாக இருந்திருப்பாரா என்பதை ரசிகர்கள் கமெண்ட்களில் பதிவிடலாம்.
