fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முன்னாள் கணவருக்கு 17 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் வெற்றியை பகிர்ந்த சோனியா அகர்வால்.. கண்டுகொள்ளாத செல்வராகவன்

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முன்னாள் கணவருக்கு 17 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் வெற்றியை பகிர்ந்த சோனியா அகர்வால்.. கண்டுகொள்ளாத செல்வராகவன்

தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு ஹீரோயின் தான் சோனியாஅகர்வால். 2003ல் அப்பா கஸ்தூரி ராஜா தயாரிப்பில், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், தம்பி தனுஷ் நடித்த படம் காதல் கொண்டேன். இப்படத்தின் வாயிலாக ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

சில தினங்களுக்கு முன் இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஸ் டேக் இட்டு ட்ரெண்டிங் ஆக்கினர்.

சோனியா அகர்வால் தன் ட்விட்டர் பக்கத்தில், “நன்றி கடவுள், சிறப்பான தமிழகம், செல்வராகவன் மற்றும் திரு கஸ்தூரி ராஜா அவர்களுக்கு, 17 வருடங்கள் கடந்துவிட்டது இந்த அருமையான சினிமா ரசிகர்களுடன்,

நன்றிகள் தனுஷிற்கு ,சக நடிகர்கள் மற்றும் அனைத்து டெக்னீசியன்களுக்கும். காதல் கொண்டேன் படம் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்துடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு சிறந்த படம்” என ஸ்டேட்டஸ் தட்டினார்.

இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்த சோனியா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இதன் காரணமாகவோ என்னவோ செல்வா, தனுஷ் போன்றவர்கள் காதல் கொண்டேன் படம் 17 வருடங்கள் கடந்ததை பற்றி எந்த ஒரு ஸ்டேட்டஸும் பதிவிடவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top