fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லாக் டவுன் சமயத்தில் சரக்கு இல்லயாம்! உடம்பை ஸ்லிம்மாகி சிக்குன்னு இருக்கும் சோனியா அகர்வால்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாக் டவுன் சமயத்தில் சரக்கு இல்லயாம்! உடம்பை ஸ்லிம்மாகி சிக்குன்னு இருக்கும் சோனியா அகர்வால்

2003-இல் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்.

பின்னர் கோவில், தளபதி விஜயுடன் மதுரை, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை, தடம் என்று பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இந்த வருடத்தில் வன்முறை என்ற படத்திலும் நடித்துள்ளார். கலைஞர் டிவியின் பிரபல சீரியலான நாணல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலை நடிகை குஷ்பூ இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006இல் செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்ட சோனியா அகர்வால் 4 வருடத்தில் காதல் வாழ்க்கை போர் அடித்து போக 2010இல் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதற்குப் பின்னரும் சோனியா அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. இவர்கள் பிரிவுக்கு முக்கியமான காரணமாக சோனியா அகர்வாலுக்கு இருந்த குடிப்பழக்கம் தான் என்று பல சர்ச்சைகளும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

தற்போது படங்களில் மீண்டும் வாய்ப்பு தேடிவரும் சோனியா அகர்வால் தனது உடல் எடையை பாதிக்கு பாதி குறித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லாக் டவுன் சமயத்தில் சரக்கு கிடைக்காததால் உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ள சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பார்த்து, புடவையில் மொத்தமும் தெரியுதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

sonia-aggarwal-cinemapettai

sonia-aggarwal-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top