Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருஷம் போனாலும் வயது குறையாத சோனியா அகர்வால் புகைப்படம்.. இப்பவும் கைவசம் 4 படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோனியா அகர்வால். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சோனியாஅகர்வால் வைத்து படங்களை இயக்கி வந்தனர்.
தனுஷ் நடிப்பில் உருவான காதல் கொண்டேன் படத்தில் திவ்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அதன்பிறகு மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு புதுப்பேட்டை படத்திலும் நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கிய அனைத்து படங்களும் சோனியாவால் நடித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

sonia agarwal
இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பின்பு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் நாணல், புதுயுகம் தொலைக்காட்சியில் மல்லி, விஜய் தொலைக்காட்சியில் அச்சம் தவிர் மற்றும் சன் டிவியில் பாண்டவர் இல்லம் ஆகிய இவர் நடித்துள்ளார்.

sonia agarwal
அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் கைவசம் 4 படங்கள் உள்ளன. சோனியா அகர்வால் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தற்போது இவர் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் வயது என்பது வெறும் நம்பர் என அவர் அழகிய பார்த்து கூறியுள்ளார்.
