சோனம் கபூர்

நடிகர் அனில் கபூரின் மகள். 2007 இல் வெளியான “சாவரியா” படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த 10 ஆண்டுகளில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், கதாபாத்திரங்களின் தேர்வு மிக அருமை என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், ராஜான்ஹா, நீரஜா, பேட்மேன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட். இவர் பிலிம்பார், தேசியவிருது மற்றும் பல விருதுகளின் சொந்தக்காரர்.

Chillin' out maxin', relaxin' all cool 😎😛 …. 2/3

A post shared by anand s ahuja (@anandahuja) on

தற்பொழுது 32 வயது ஆகிறது. இவரும் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம், நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஸ்ரீதேவியின் மரணத்தால் தள்ளிப்போனது.

இந்நிலையில் இந்த ஜோடியின் திருமணம் ஹிந்து முறைப்படி மே 11 , 12 தேதிகளில் நடைபெறுள்ளதாம். மேலும் ஸ்விட்சர்லாந்த்த்தில் ஜெனீவா நகரத்தில் இத்திருமணம் நடக்கவுள்ளது என சொல்லப்படுகிறது.