சோனம் கபூர்

சோனம் கபூர்ஜூன் 9, 1985 இல் பிறந்தவர். பாலிவுட்டில் முன்னணி நடிகை . இவர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார். சோனம் கபூர் தான் மூன்று குழந்தைகளில் மூத்தவர். கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் இவர் படித்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றவராம்.

sonam-kapoor-and-anand-ahuja-

கபூர் குடும்பத்தின் முக்கியமான நடிகையாகக் கருதப்படுபவர் சோனம் கபூர். பாலிவுட்டில் மிகவும் நேர்த்தியாக உடையணியும் நடிகையும் கூட. கடந்த 4 ஆண்டுகளாக தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவைக் காதலித்து வந்தார். வெளிநாட்டில் நடக்கவேண்டிய இவர்கள் திருமணம், ஸ்ரீதேவி மறைவால் மும்பையில் சமீபத்தில் நடந்தது.

திருமணத்திற்கு பின் தன் பெயரை சோனம் கபூர் அஹுஜா என்ப் பெயர் மாற்றம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் “வீர் டி வெட்டிங்” எனும் தன்னுடய பட ப்ரோமஷன்களில் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் தாலியை கழட்டி அதனை பிரேஸ்லெட் போல் மாற்றியமைத்து அணித்துள்ளதை நம் நெட்டிசன்கள் கண்டு பிடித்து விட்டனர்.

Sonam Kapoor

குடும்பம் கலாச்சாரம், பாரம்பரியம் என பேச ஆரம்பித்து இணையத்தில் பலரும் அவரை தீட்டி தீர்த்து வருகின்றனர்.

Sonam Kapoor

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

கழுத்தில் அனியாவிட்டாலும் கலாய்ப்பார்கள், அதே போல் இந்த மாதிரி ஏதேனும் முயற்சி எடுத்தாலும் கழுவி ஊத்துவர். போங்கப்பா  உங்க வேலைய நீங்க பாருங்க , அவங்களுக்கு தெரியும் எது சரி , தவறென்று …