Tamil Cinema News | சினிமா செய்திகள்
மறு ஜென்மம் எடுத்த சோனாலி பிந்த்ரே.. இப்படியும் ஒரு சோதனையா?
Published on
பம்பாய், காதலர் தினம் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இந்தப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். ஆனால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக சில வருடங்கள் வலம் வந்தார். இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் நியூயார்க் நகரில் மருத்துவம் பார்த்து விட்டு இந்தியா திரும்பினார்.
அப்போது அவர் கணவனிடம் உடல்நலத்தை விசாரித்த செய்தியாளர்களிடம், சோனாலி பிந்த்ரே ஒரு நல்ல தைரியசாலி மட்டுமல்லாமல் உடல் நலமாக இருப்பதாகவும் கூறினார். சோனாலி நான் மனைவியாக அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் அவர் கூறினார். சமுதாயத்தில் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களை நாம் மனசார ஆதரித்து அவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்தால் நம் சங்கதியும் வாழும்.
