மேனேஜருக்கும், சோனாக்ஷிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா?

சோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், அவரின் மேனேஜருமான பன்ட்டி சஜ்தாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. இதை சோனாக்ஷி மைக் வைக்காத குறையாக கூறி மறுத்து வந்தார். ஆனாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை.

இந்நிலையில் சோனாக்ஷிக்கும், பன்ட்டிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. அதையும் மறுத்து வந்தார். சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.

சோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது கூறியிருப்பதாவது, சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்றார்.

Comments

comments

More Cinema News: