மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கவிதா லட்சுமி. ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ஸ்த்ரீதனம் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தற்போது அயலத்தே சுந்தரி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார்.அந்த தொடரை கே.கே. ராஜீவ் இயக்கி வருகிறார்.

மகனின் படிப்பு செலவுக்காக தோசைக்கடை நடத்தி வருகிறார் ஒரு நடிகை கவிதா லட்சுமி. மேக்கப், ஒளிவெள்ளம் எதுவும் இல்லாமல் செய்யும் தொழிலில் திறமையே செல்வம் என்று ரோட்டோர கடை நடத்தி வருகிறார் அவர்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிதா லட்சுமி. தற்போது திருவனந்தபுரம் நெய்யாற்றிங்கரையில் வசித்து வருகிறார். இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ஓரம் இவர் தோசைக்கடை நடத்தி வருகிறார்.

உதவிக்கு யாரும் இல்லாமல் தானே தோசை வார்த்து அனைவருக்கும் தருகிறார். இவரை அடையாளம் கண்டுகொண்ட ஒரு ரசிகர் இவர் தோசைசுடும் காட்சிகளை சுட்டு பேஸ்புக்கில் போட்டுவிட்டார்.

இந்த நடிகை தோசை கடை நடந்தநேர்ந்தது ஒரு சோகமான விஷயம். இவரது மகனை லண்டனில் படிக்கவைக்கிறேன். அங்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று ஏஜென்சி மூலம் அனுப்பி வைத்தார். இதற்காக 50லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இவர் மகன் அங்குசென்றதும் ஆறு மாதத்தில் அந்தபீஸ், இந்த பீஸ் என்று கல்விநிறுவனம் பல லட்சங்களை கேட்டுப்பெற்றது. இது மோசடி வேலை என்று தெரிந்தபின்னரும், மகனின் படிப்புக்காக வேறுவேலையின்றி கடன்வாங்கி பணம் கொடுத்தார்.

தற்போது கடன் நெருக்கடி, மகனின் படிப்புக்கு பணம் அனுப்பவேண்டிய நிர்பந்தம் நடிகையை ரோட்டோரக்கடை நடத்த கொண்டுவந்துவிட்டுள்ளது.நடிகர் சங்கமோ, வங்கிகளோ தனக்கு உதவவில்லை என்று வருந்தும் நடிகை.

இப்போதும் எனக்கு சினிமா வாய்ப்பு உள்ளது. முன்னணி டிவியில் ஒரு சீரியலில் நடிக்கிறேன். ஓய்வுநாட்களில் ஓட்டல் நடத்தித் தான் சம்பாதிக்கிறேன் என்று வருந்துகிறார். இவர் தோசை சுட்டு விற்கும் வீடியோ வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.