fbpx
Connect with us

200 கோடியில் கல்யாணம்.. 4000 கிலோ குப்பைகள்.. குப்பை கிடங்காக மாறிய திருமணம்

India | இந்தியா

200 கோடியில் கல்யாணம்.. 4000 கிலோ குப்பைகள்.. குப்பை கிடங்காக மாறிய திருமணம்

இந்தியாவைச் சேர்ந்த  குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவில் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது குப்தாவின் மகன்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அதாவது ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை அஜய் குப்தாவின் மகன் சூரியகாந்த்க்கு  ஜூன் 20 முதல் 22 ம் தேதி வரை அதுல் குப்தாவின் மகன் ஷாஷாங்க்கும் பிரமாண்டமாக திருமண நிகழ்வு நடைபெற்றது.

இந்த திருமண ஏற்பாட்டால் சுற்றுபுற சூழல் பாதித்துள்ளதாக பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் மற்றும் கத்ரினா போன்ற பிரபலங்களும் கலந்து உள்ளனர். இந்த திருமணத்திற்காக அந்த பகுதியில் ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அலங்காரத்திற்கு தேவையான பூக்களை சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்தனர். 200 கோடி ரூபாய் செலவு செய்த இந்த இரண்டு திருமணங்களால் ஆலி பகுதியில் 4000 கிலோ குப்பைகள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த திருமண நிகழ்வால் பாக்கெட்டுகள், பாட்டில்கள் போன்ற பல இடங்களில் கிடப்பதாகவும் தற்போது தங்கள் பகுதிகள் அனைத்தும் குப்பை மேடாக காட்சி அளித்ததாகவும் மேலும் இதனால் கால்நடைகளும் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘தி வையர்’ என்ற  ஆங்கில இணையத்துக்கு மனவருத்தத்துடன் பேட்டியளித்துள்ளார்.

மேலும் 20 பேர் வைத்த குழு அமைத்து அந்த குப்பைகளை நீக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top