7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கான ஆணையைப் பெற்ற ஆட்டோ டிரைவரின் மகன்! நெஞ்சார வாழ்த்துக் கூறும் தமிழக முதல்வர்!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது அம்மாவின் வழிவந்த எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அதிமுக அரசு.

ஏனென்றால் இவருடைய முயற்சியால் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

எனவே இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற உறுதுணையாக உள்ளது.

அதற்கு முன்னுதாரணமாக தான், இந்த வருட மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த ஆயிரம் விளக்கு பகுதி சூளைமேடு அருணாச்சலம் 2வது தெருவில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ்-நாகலக்ஷ்மி தம்பதியரின் மகனான நரசிம்மன் என்ற அரசு பள்ளி மாணவர் மருத்துவம் பயில்வதற்கான ஆணையை பெற்றுள்ளார்.

எனவே நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவன் நரசிம்மனை தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டி, மருத்துவ படிப்பிற்கான ஆணையை வழங்கினார்.

NEET-cinemapettai
NEET-cinemapettai

அதுமட்டுமில்லாமல் மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளார்.