Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேல்முருகனை துரத்திவிட்டு காயினை பொறுக்கிய சோமு, ஆரி.. காரித்துப்பும் ரசிகர்கள்!
விஜய் டிவியில் கோலாகலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் வேல்முருகன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில் வேல்முருகனுடைய உண்டியலை உடைத்தபோது ஆரியும், சோமுவும் அவருடைய காயின்களை பொறுக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை எரிச்சலாகி உள்ளது.
அதாவது, பிக்பாஸ் வீட்டில் வெளியேறுபவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உண்டியலை உடைத்து, அதில் உள்ள காயினை வீட்டிற்குள் அவர்களுக்கு பிடித்த நபருக்கு கொடுத்து செல்வது வழக்கம்.
அந்தவகையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து செல்லும்முன் வேல்முருகன் தன்னுடைய காயினை அர்ச்சனாவுக்கு கொடுக்க நினைத்தபோது, அர்ச்சனா அதை வேண்டாம் என்று மறுத்து, சம்யுக்தாவிற்கு கொடுக்கச் சொன்னார்.
இதனால் வேல்முருகன் தான் உடைக்கும்போது, ‘யாருக்கு காயின் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி உண்டியலை உடைத்தார்.
இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் வேல்முருகன் வெளியே போவதை நினைத்து வருந்திக் கொண்டிருந்த நிலையில், ஆரியும் சோமுவும் மட்டும் அவருடைய காயின்களை பொறுக்குவதில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
எனவே, வீட்டில் இருந்து ஒருவர் செல்வதை கூட மதிக்காமல் காயின்களை பொறுக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஆரியையும், சோமுவையும் பிக்பாஸ் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

aari-coin
