Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் தலை இருக்காது.. நள்ளிரவில் வந்த கொலை மிரட்டல்
அசுரன் என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் கிராமத்து கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவர முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் குறிப்பிட்ட ஜாதியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் நடக்கும் சாதி பிரச்சனைகளை கதையாக்கி படமாக வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் நேற்று வாட்ஸ் அப் வீடியோ ஒன்றில் தனுசுக்கு ஒரு இளைஞர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், எங்கள் ஜாதியை பற்றி படம் எடுத்தால் உன் தலையை வெட்டி விடுவேன் எனவும், எங்கள் ஜாதியினர் உங்களை கொலை செய்து விடுவார்கள் எனவும் சவால் விட்டுள்ளார்.
இது தனுஷ் மற்றும் படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு இடமாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிகிறது.
