Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி.. மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு ஓட்டம்!
சமீபத்தில்தான் ரம்யா கிருஷ்ணன் தனது காரில் சரக்கு பாட்டில்களை கடத்தி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பண மோசடியில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஒரு காலத்தில் ரம்யா கிருஷ்ணன் எப்படி நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தாரோ அதேபோல் தற்போது நம்பர் ஒன் நடிகையாக தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வலம் வருபவர் நயன்தாரா.
இன்னமும் ரம்யா கிருஷ்ணனுக்கு மார்க்கெட் குறையவில்லை என்பதுதான் உண்மை. சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களுக்கு 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். நயன்தாராவும் ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து பெங்களூருவில் புறம்போக்கு நிலம் ஒன்றை கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து வாங்கி வைத்துள்ளனர். ஒரு புரோக்கர் ஒரு லட்சம் ரூபாய்க்கு புறம்போக்கு நிலத்தை வாங்கி இவர்களிடம் கோடிக்கணக்கில் விற்று விட்டு தப்பி ஓடி விட்டார்.
தற்போது அந்த இடம் நீர் தேக்கம் செய்யப்பட வேண்டிய இடம் என பெங்களூரு அரசு நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் ஒருவரிடம் பணத்தை ஏமாந்தது வெளியே தெரியாமல் மறைத்து வந்துள்ளனர்.
கோமனத்தில் வைத்த சில்லறை காசு தங்காது என்பதைப்போல சினிமாவில் என்னதான் மறைத்து மறைத்து செய்தாலும் வெளியில் எப்படியாவது தெரிந்து விடும் என்பதை போல இந்த விஷயமும் வெளிவந்துள்ளது.
