fbpx
Connect with us

Cinemapettai

அந்த இடத்தில் தேங்காய் வைத்த விளையாடிய இயக்குனரை திட்டிய டாப்ஸி அந்தர் பல்டி

News | செய்திகள்

அந்த இடத்தில் தேங்காய் வைத்த விளையாடிய இயக்குனரை திட்டிய டாப்ஸி அந்தர் பல்டி

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்றதுடன், தெலுங்கு படத்தில் நடித்தபோது அவரது தொப்புளில் தேங்காய் வைத்து காட்சி படமாக்கிய சீனியர் இயக்குனரை லெப்ட் ரைட் வாங்கினார் டாப்ஸி . அவர்தான் இப்போது நீச்சல் உடைக்கு மாறி இருக்கிறார். கோலிவுட்டில் கவர்ச்சி காட்ட மறுத்துவிட்டு இந்தியில்தான் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தருகிறார்கள் என்று ஜூட் விட்டார்.

அதற்கேற்ப பிங்க், தி காஸி அட்டாக், நாம் சபானா போன்ற படங்களில் அடிபட்டு, உதை வாங்கி நடித்தார். எல்லாம் ஊற்றிக்கொண்டது. ஆனால் கவர்ச்சி ஹீரோயின்கள் கொடிகட்டி பறந்தனர். அதைப் பார்த்து வெறுத்துப்போன டாப்ஸி இனி கவர்ச்சியாக நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். ‘கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு நீங்கதானே சொன்னீங்கன்’னு கேட்டப்ப, ‘அது போனமாசம்…’ என்று பதில் வந்தது.

ஜூட்வா 2ம் பாகம் இந்தி படத்தில் நீச்சல் உடையில் நடித்து அதிரடியை தொடங்கியிருக்கிறார் டாப்ஸி. இதுபற்றி அவர் கூறும்போது,’தொப்புள் தெரிய நீச்சல் உடை அணிவதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அதுவொரு கலைநயம் மிக்க நடிப்பு.சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடிப்பதில் எனக்கு நோ ப்ராப்ளம். இந்த காட்சிக்காக நான் சற்று கூடுதல் வெயிட் போட்டிருக்கிறேன். வெயிட்போடுவது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்தவர்களுக்கு புரியும். எது எப்படியோ நான் ஒன்றும் கிரிமினல் குற்றம் செய்துவிடவில்லை.
இளம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கவே நீச்சல் உடையில் நடிக்கிறேன், ஓ கே வா’ என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top