India | இந்தியா
பனிமலருக்கு வந்த அந்தரங்க புகைப்படங்கள்.. அனுப்பியவர்களுக்கு கிடைத்த செருப்படி பதில்
நாளுக்கு நாள் சமூக வலைதளங்கள் மிகவும் மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் ரசிகர் சண்டைகளின் போது பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மிகவும் கொச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் நடிகர் நடிகைகளுக்கும் நேரடியாக அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவது, கொச்சையான வார்த்தைகள் பேசுவது என தொடர்ந்து நெட்டிசன்களின் சேட்டை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அதேபோல்தான் பிரபல பெண் பத்திரிக்கையாளர் பனிமலர் என்பவருக்கு சில ஆண்கள் தங்களது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி அவரை டார்ச்சல் செய்துள்ளனர். இதற்கு ட்விட்டர் வாயிலாக பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

panimalar-tweet-01
பனிமலர் கூறியதாவது, இயல்பிலேயே பெண்கள் ஆண்களின் அந்தரங்க புகைப்படங்களை பார்த்து ஆசையில் மயங்கி வருவார்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அது முற்றிலும் தவறு என உணர்த்தி உள்ளார்.
மேலும் ஆண்களின் நன்னடத்தையும் நல்லொழுக்கமும் பெண்களிடம் நடந்துகொள்ளும் கண்ணியமும் மட்டுமே பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆண்களின் உறுப்பு மட்டும் ஆண்மை இல்லை எனவும், தன்னுடைய செயல்களால் பெண்களை வசீகரிக்கும் பல பேராண்மை உள்ள மனிதர்களை தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எனவும் பேசியுள்ளார்.

panimalar-tweet-02
பெண் பத்திரிக்கையாளர் என்று கூட பார்க்காமல் இவ்வாறு சேட்டை செய்யும் நெட்டிசன்களை எப்படித்தான் கட்டுப்படுத்த போகிறோமோ என பலரும் விழிபிதுங்கியுள்ளனர்.
