மனிதர்கள் மத்தியில் அனைவரிடமும் ஏதேனும் ஒரு பழக்கம் முகம் சுளிக்கும்படி இருக்கும். சிலர் மூக்கை நோன்டுவார்கள், சிலர் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பார்கள். சில கன்றாவியான உணவு கலவைகள் சாப்பிடுவது, அசிங்கமாக பேசுவது என பல பழக்கங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும்.

இது பிரபலங்களுக்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், பிரபலங்கள் என்பதால் இது போன்ற முகம் சுளிக்கவைக்கும் பழக்கங்கள் கூட இவர்களிடம் சற்று விசித்திரமாக தான் இருக்கிறது. ஷூ அணிந்துக் கொண்டே உறங்குவது, கழிவறையில் சாப்பிடுவது, வெட்டவெளியில் குளிப்பது என சில பிரபலங்கள் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.

ஷாருக்கான்

இந்தி சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கான் ஒருநாளுக்கு ஒரு முறை தான் ஷூவை கழற்றுவாராம். அதுவும் உறங்கும் போது. சில சமயங்களில் ஷூ அணிந்துக் கொண்டே உறங்கிவிடுவாராம்.

மேகன் ஃபாக்ஸ்

ஹாலிவுட் நடிகை மேகன் ஃபாக்ஸ் கழிவறை சென்று வந்தால் ஃப்ளஷ் செய்ய மாட்டாராம். இதை இவரது நண்பர்கள் மட்டுமின்றி இவரே கூட ஓர் பேட்டியில் கூறியிருக்கிறார். இவரிடம் இவரது நண்பர்கள் பலமுறை குறைகூறியும் கூட திருத்திக் கொள்ளாமல் இருக்கிறார் மேகன்

சுஷ்மிதாசென்

நிலா வெளிச்சத்தில் வெட்டவெளியில் குளிப்பது சுஷ்மிதா சென்னுக்குக் மிகவும் பிடிக்குமாம். இதற்காகவே தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு குளியல் டப் வைத்திருக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  வாழு அல்லது வாழவிடு தல அஜித் ரசிகர்களின் செயலை பார்த்தீர்களா.!

டெமி மூரே

டெமி மூரே அட்டைப்பூச்சிகள் தன் இரத்தத்தை உறிஞ்சுவதை ரசித்து ஏற்றுக் கொள்கிறார். கேட்டால் இது தன் அழகின் ரகசியம் என்கிறார்.

ஜிதேந்திர

பிரபல இந்திய நடிகரான ஜிதேந்திர கழிவறையில் உட்கார்ந்து பப்பாளி உண்பதை பழக்கமாக வைத்திருக்கிறார். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. எப்படிய்யா?

பிராட் பிட்

பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் ஏஞ்சலினா ஜோலி-ன் கணவருமான பிராட் பிட் குளிக்கும் போது சோப் பயன்படுத்த மாட்டாராம். சோப்பில் ரசாயன கலப்புகள் இருப்பதால் தவிர்ப்பதாக கூறுகிறார். (நெசம்தான்ப்பு)

கிறிஸ்டினா ஆகீலேரா

வெளியே ரெஸ்டாரண்ட் சென்று உணவருந்தினால் கைகள் கழுவாமல் எழுந்து வந்துவிடுவாராம் கிறிஸ்டினா ஆகீலேரா.

கேஷா

பிரபல பாடகி மற்றும் பாடலாசிரியரான கேஷா, தனது சிறுநீரை தானே குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார். ஒருமுறை இதை நிரூபிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக குடித்தும் காண்பித்துள்ளார்.

பமீலா ஆண்டர்சன்

புகழ்பெற்ற கவர்ச்சி மாடலும், ஹாலிவுட் நடிகையுமான பமீலா ஆண்டர்சன். முகம் பார்க்கும் கண்ணாடி பார்ப்பதை தவிர்கிறாராம். தனது பிம்பத்தையே கண்ணாடியில் பார்க்க இவருக்கு பயமாம்.

சான்ட்ரா புல்லக்

அதிகம் படித்தவை:  விஜய் 60 வது பட தலைப்பு பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு

கண்களுக்கு கீழ் சருமத்தை சுத்தம் செய்ய சான்றா மூலநோய் க்ரீமை பயன்படுத்துகிறாராம்.

கேமரூன் டயஸ்

செக்ஸ் டேப் எனும் படத்தின் மூலம் உலகளவில் ஃபேமஸ் ஆன கேமரூன் டயஸ், கதவுகளை கை மூட்டுகளால் திறக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்.

அமிதாப்பச்சன்

இரண்டு கைகடிகாரம் கட்டும் பழக்கம் அமிதாப்பச்சனிடம் இருக்கிறது. உண்மையில் அபிஷேக் வெளிநாட்டில் டிக்கும் போது அவரை தொடர்புக்கொள்ள அந்நாட்டின் நேரத்தை செட் செய்து எக்ஸ்ட்ரா வாட்ச் கட்ட துவங்கினாராம் அமிதாப்பச்சன்.

கேதரின் ஜீடா ஜோன்ஸ்

கேதரின் ஜீடா ஜோன்ஸ், பற்களை ஸ்ட்ராபெர்ரி கொண்டு துலக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார். இது பல் சொத்தை ஏற்படாமல் இருக்க உதவும் என நம்புகிறார்.

டாம் க்ரூஸ்

நைட்டிங்கேல் (குயில்) பறவையின் கழிவை முகத்தில் அப்பளை செய்து கொள்வாராம் டாம் க்ரூஸ். இது சருமத்தின் வயதாகும் செல்களை புத்துயிர் பெற வைக்கிறது என டாம் நம்புகிறார்.

ஜெனிபர் அனிஸ்டன்

விமானத்தில் ஏறும் போது முதலில் வலது காலை தான் எடுத்து வைப்பாராம். மேலும், இவர் எந்த திசையை நோக்கி செல்கிறாரோ அந்த திசை நோக்கி விமானத்தை தொடுவாராம். இது ஒருவகையான மூடநம்பிக்கையாக பின்பற்றி வருகிறார் ஜெனிபர்.