விஜய்யால் கேஜிஎஃப் படத்திற்கு வந்த சிக்கல்.. ரேஸில் முந்த போவது யார்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தமிழில் மாஸ்டர் மற்றும் டாக்டர் படங்கள் வசூலில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. அதற்குப் பிறகு விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த பீஸ்ட் படமும் அதே அளவிற்கு வசூலை குவிக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரும் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். அவரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதே போன்று வரும் ஏப்ரல் 14ஆம் தேதி கன்னட நடிகர் யாஷ் நடித்திருக்கும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து தமிழ், கன்னடம், தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் பெருவாரியான வசூலை குவித்தது.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகமும் தமிழ், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. அதில் தமிழகத்தில் இப்படம் வெளியாவதில் தான் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது விஜய்யின் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் பட ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெறவில்லை. இதனால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட அவர்கள் வெறியுடன் காத்திருக்கின்றனர்.

அதனால் இந்தப் படத்தை தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட படக்குழு மும்முரமாக வேலை செய்து வருகிறது. இதனால் கேஜிஎப் திரைப்படத்திற்கு அதிக அளவு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கூறும் திரைப்பட உரிமையாளர்கள், இந்த இரண்டு படங்களுக்கும் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் வலிமை, ஆர் ஆர் ஆர் போன்ற திரைப்படங்களைப் போலவே இந்தப் படங்களும் அதிக அளவில் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த இரு படங்களும் எங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என்று கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்