ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பெரும் ஆதரவு அளித்தார். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கி வந்தார் சமூக வலைதளங்களில். அவசரச் சட்டங்கள் குறித்து அச்சம் அடைய தேவையில்லை என்றும் பலமுறை விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் கலைந்து செல்ல கோரியதை அடுத்து சென்னை மற்றும் மதுரையில் சில அசம்பவாவித சம்பங்கள் நடந்து உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மார்க்கண்டே கட்ஜூ வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பிரச்சனையானது, அங்கு அமைப்பு மற்றும் தலைமை கிடையாது. அதுடனைய முடிவு அங்கு ஒழுக்கமில்லை, வெவ்வேறு தரப்பு மக்கள் பல்வேறு திசைகளை நோக்கி இழுத்து செல்கிறார்கள். சில விஷயங்களில் ஒருதரப்பு மக்கள் ஒத்துக்கொண்டால், மற்றவர்கள் உடனடியாக நிராகரிக்கிறார்கள். அதனுடன், எப்போது எல்லாம் பிரபலமான போராட்டங்கள் நடைபெறுகிறதோ, அப்போது எல்லாம் சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கிறது, கெடுதலை ஏற்படுத்தவும் சில விஷயங்களை செய்கிறது,” என்று கூறிஉள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இப்போது என்ன நடக்கிறதோ, அதனை பார்க்கும் போது மிகவும் வருத்தம் அடைகிறேன் என்றும் கட்ஜூ கூறிஉள்ளார்.