Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யாவை கழட்டி விட்டுட்டு கேபிக்கு கொக்கி போட்ட போட்டியாளர்.. ஓவராக ஜொள்ளு விட்டால் வாயடைத்துப் போன பிக் பாஸ் வீடு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய சுவாரஸ்யத்தை குறைக்காமல், மக்களிடையே ஆர்வத்தை பல்வேறு வகையில் தூண்டி வருகிறது.
அந்தவகையில் இந்த வாரம் கால் சென்டர் டாஸ்க்கை கொடுத்து கொளுத்தி போட்டிருக்காரு பிக் பாஸ்.
ஏற்கனவே இந்த டாஸ்க் மூலம் அர்ச்சனா, பாலாஜி மற்றும் சனம்- சம்யுக்தா ஆகியோருக்கிடையே சண்டை தீ பற்றிக்கொண்டு எரிந்தது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இதற்கு அப்படியே மாறாக சோம் கேபிக்கு கால் செய்து வழிந்து இருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
ஏனெனில் சோமுக்கும் ரம்யாவுக்கும் இடையே தான் லவ் ட்ராக் ஆரம்பிக்க போது என்று ஆவலோடு இருந்தனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
ஆனால் சோம் சம்மந்தமே இல்லாமல் கேபியை கலாய்த்ததோடு, ‘நீங்க அழகா இருக்கீங்க’ என்று கூறியிருக்கிறார். இதற்கு கேபியும் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
மேலும் ‘போன கட் பண்ணுங்கனு’ சோம் சொன்னதும், கேப்ரில்லா போன வச்சுட்டாங்க. அதன்படி எழிமினேஷன்ல்ல இருந்தும் சோம் தப்பிச்சுடாரு.
அதுமட்டுமில்லாமல் சனம், கேபி வந்தவுடன் ‘எதுக்கு போன கட் பண்ணுன?’ என்று கேட்டதற்கு, ‘தெரிஞ்சுதான் கட் பண்ணேன்’ என்று கூலாக பதில் சொன்னார் கேபி. இதனால் சனம் வாயடைத்துப் போய் நின்றார்.
எனவே இந்த சீசனில் ரம்யாவுக்கும் சோமுக்கும் இடையே லவ் ட்ராக் ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த பல பிக்பாஸ் ரசிகர்கள், நேற்றைய எபிசோடை பார்த்து பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
