பேருந்தில் தன்னிடம் அத்துமீறிய மென்பொருள் பொறியாளரை மொபைல் அப்ளிகேஷன் மூலமாக புகார் அளித்து காவல்துறையினரிடம் சிக்க வைத்துள்ளார் இளம்பெண் ஒருவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், சமீபத்தில் பெங்களூரு காவல்துறையினரால் ”Know your police station” என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்ளிகேஷன் மூலமாக, பெங்களூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் படித்தவை:  பலநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இமைக்கா நொடிகள் படக்குழு

இந்நிலையில் நேற்று பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு, 45 வயது மதிக்கத்தக்க மென்பொருள் பொறியாளர் ஒருவர் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், Know your police station அப்ளிகேஷன் வாயிலாக அருகிலுள்ள காவல்நிலையத்தின் தொடர்பு என்னை அறிந்து கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து புகார் அளித்தார். மேலும் சம்மந்தப்பட்ட நபரின் புகைப்படத்தையும் வாட்ஸ் ஆப் மூலமாக காவல்துறையினருக்கு அனுப்பி வைத்தார்.

அதிகம் படித்தவை:  தோனியின் அம்மாவாக நடிக்கும் விஜய், சூர்யாவின் ஹீரோயின்

இதனை தொடர்ந்து அந்த மாநகர பேருந்து சென்று கொண்டிருந்த பகுதிக்கு அருகில் இருந்த, பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள பிங்க் ஹொயசால வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த பெண் காவல்துறை அதிகாரிகள், மாநகர பேருந்தை இடைமறித்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

அந்த இளம்பெண் ஆன்லைன் மூலம் புகார் அளித்த அரை மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்ததற்காக, பெங்களூரு காவல்துறையினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.