ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

கம்பெனி தரும் அதிசய பொருள் சோன்பப்டி டப்பா.. பெரிய சீமையில இல்லாத தீபாவளி போனஸ், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: எல்லோரும் பண்டிகை நாளை வரவேற்க தயாராகி விட்டார்கள். அடுத்த வாரம் தீபாவளி வரும் நிலையில் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள் என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

memes
memes

பெண்கள் ஒரு பக்கம் ஆர்வத்துடன் புடவை சுடிதார் என வாங்கி குவிக்க ஆண்கள் பட்ஜெட்டை மீறி செலவாகிறது என தலையை சொரிந்தபடி சமாளிக்கின்றனர். அதேபோல் குழந்தைகள் இப்போவே பட்டாசு வெடித்து ஏரியாவை கிடுகிடுக்க வைக்கின்றனர்.

memes
memes

இப்படி தீபாவளி கொண்டாட்டங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டது. அதேபோல் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், ஸ்வீட் பாக்ஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

memes
memes

அதைத்தான் நெட்டிசன்கள் இப்போது கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் எத்தனை காலம் ஆனாலும் தீபாவளி இனிப்பு என்ற பெயரில் அனைத்து கம்பெனிகளும் கொடுக்கும் ஒரே ஸ்வீட் சோன்பப்டி டப்பா தான்.

memes
memes

விதவிதமான பிளேவர்களில் கிடைக்கும் இந்த ஸ்வீட் அனைத்து வீடுகளுக்கும் அழையா விருந்தாளியாக வந்து நிற்கும். அவ்வளவு ஏன் பண்டிகை நாளை முன்னிட்டு வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் கூட இதைக் கொண்டு வந்து கொடுப்பதுதான் சோதனை.

memes
memes

அப்படி என்னடா சீமையிலே இல்லாத பலகாரமா இருக்கு என நமக்குள் ஒரு மைண்ட் வாய்ஸ் ஓடும். ஆனாலும் வேறு வழி இல்லாமல் அதை வாங்கி ஓரமாக வைத்து விடுவோம். இதை இணையதள வாசிகள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

memes
memes

வருஷா வருஷம் எங்க கம்பெனி தரும் அதிசய பொருள் இந்த சோன்பப்படி டப்பா தான். உலகத்திலே எங்கேயுமே கிடைக்காத இனிப்பு தான் இது என பங்கம் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ.

- Advertisement -spot_img

Trending News