ரம்ஜான் ஆகஸ்ட்லருந்து முன்னேறி மார்ச்சுக்கு வந்துருச்சு.. ஆனா தீபாவளி அக்டோபர் நவம்பர்லயே சுத்திட்டு இருக்கு, வைரல் மீம்ஸ்

memes
memes

Memes: ரம்ஜான் நோன்பு ஆரம்பித்து விட்டது. அரசியல் கட்சியினர் ஒரு பக்கம் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை வைத்து கட்சிக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் இதுவே விவாதமாக சர்ச்சையாக மாறியுள்ளது. அதேபோல் முஸ்லிம் பிரண்ட் இருப்பவர்கள் இப்போதே பிரியாணிக்கு அடி போட ஆரம்பித்து விட்டனர்.

அதிலும் சாயந்தர நேரம் வந்தாலே பள்ளிவாசலில் நோன்பு கஞ்சியை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும். ரம்ஜான் நோன்பு ஆரம்பித்து விட்டாலே சின்ராசை கையிலே பிடிக்க முடியாது.

அப்படித்தான் பலர் இருக்கின்றனர். இதை நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாசம் வந்துகிட்டு இருந்த ரம்ஜான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி மார்ச் மாசத்துக்கு வந்துருச்சு. ஆனா இந்த தீபாவளி மட்டும் அக்டோபர் நவம்பர்லயே சுத்துது.

இந்த வருஷமாவது பாய் ப்ரெண்ட் நமக்கு பிரியாணி கொடுப்பானா வழக்கம் போல எஸ்கேப் ஆயிடுவானா தெரியலையே. ரம்ஜானுக்கு பிரியாணி வாங்க ஒரு பாய் ஃப்ரெண்ட் கூட இல்லையே.

இப்படியாக பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. அதில் நம்மை சிரிக்க வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner