அண்ணே அந்த ஆடு முறைக்கிது.. புரட்டாசி முடியட்டும் பொங்க வச்சுடுவோம், ட்ரெண்டிங் மீம்ஸ்

Purattasi Memes: இன்று புரட்டாசி மாதம் ஆரம்பித்து விட்டது. அதனால் இந்த மாதம் முழுவதும் மட்டன், சிக்கன், மீன், முட்டை என எதையுமே தாய்மார்கள் கண்ணில் காட்ட மாட்டார்கள். இதனால் அசைவ பிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும்.

purattasi-memes
purattasi-memes

அதனால் நேற்றைய தினமே முடிந்த அளவு அசைவத்தை அவர்கள் வெளுத்து வாங்கி இருப்பார்கள். அதிலும் சிலர் இரவு 12 மணிக்கு மேல் தானே புரட்டாசி என அதுவரையில் விடாமல் சாப்பிட்ட முரட்டு நான் வெஜ் வெறியர்களும் உண்டு.

purattasi-memes
purattasi-memes

இன்னும் சிலர் முட்டை சைவம் தான் அதையாவது ஒரு ஆம்லெட் போட்டு கொடு என மனைவிமார்களை நச்சரிக்கும் சம்பவங்களும் நடக்கும். அதேபோல் இந்த மாதம் தான் பல இடங்களில் கோழி ஆடு அனைத்தும் சுதந்திரமாக இருக்க முடியும்.

purattasi-memes
purattasi-memes

ஆனாலும் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர். இருப்பினும் கணிசமான கூட்டம் குறைவதால் கறிக்கடைகளில் பல ஆபர் இந்த மாதத்தில் கொடுக்கப்படும். சிக்கன் மட்டன் விலை கூட இறங்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

purattasi-memes
purattasi-memes

இப்படி புரட்டாசி அலப்பறை ஒருபுறம் இருக்க ஆவணி மாதம் முழுவதும் கல்யாணம் காதுகுத்து என மொய் வைத்து நொந்து போன குடும்ப தலைவர்களும் உண்டு. சம்பளம் மொத்தமும் காலி ஆயிடுச்சு இப்ப காய்கறிக்கு கூட வழி இல்லையே என அவர்கள் புலம்புவதையும் கேட்க முடிகிறது.

purattasi-memes
purattasi-memes

இப்படி ரணகளமாக ஆரம்பித்திருக்கும் புரட்டாசியை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர் எங்களுக்கெல்லாம் புரட்டாசியே கிடையாது என லந்து காட்டி வருகின்றனர். அப்படி சில ஜாலியான மீம்ஸ் தொகுப்பு இதோ.

purattasi-memes
purattasi-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

- Advertisement -spot_img

Trending News