எல்லாரும் குடும்பஸ்தன் ஓடிடிக்கு வெயிட் பண்ணாங்க.. ஒருத்தன் மட்டும் ஃபையர் படத்துக்கு வெயிட் பண்றான், ட்ரெண்டிங் மீம்ஸ்

memes
memes

Memes: பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் படங்கள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் இந்த வருட தொடக்கத்தில் மதகஜராஜா காமெடி அலப்பறையாக வந்து வெற்றி பெற்றது.

இத்தனைக்கும் 12 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது தான் ஹைலைட். அதை அடுத்து வெளிவந்த குடும்பஸ்தன் படமும் ஹிட் தான்.

மணிகண்டன் நடிப்பில் சிறு பட்ஜெட்டில் வெளிவந்த இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை பெரிதும் கவர்ந்தது. தியேட்டரில் சக்கை போடு போட்ட இப்படம் இன்று டிஜிட்டலில் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே படத்தை பார்க்காத ரசிகர்கள் இந்த நாளுக்காக தான் காத்திருந்தனர். ஆனால் இன்னும் சில லெஜெண்ட் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வந்த ஃபயர் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

ரொம்பவே தாராளமாக ஹீரோயின்கள் நடித்திருந்த அப்படமும் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் ஒடிடிக்காக இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.

இதை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல் குட்டி தனுஷ் நடித்த டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களும் மீம்ஸ் மெட்டீரியலாக மாறி இருக்கிறது. அதன் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner