திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

இந்தியாவே திரும்பிப் பாக்குற படமா இருக்கும்னு நினைச்சா.. இந்தியன் 2வயே திரும்ப பார்க்கலாம்னு நினைக்க வச்சிருச்சு, கங்குவா மீம்ஸ்

Kanguva Memes: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா நேற்று வெளியானது. 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் தற்போது அதிகபட்ச நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

kanguva-memes
kanguva-memes

படம் வெளிவருவதற்கு முன்பு ஏகப்பட்ட ஆரவாரம் இருந்தது. இதன் மூலம் சூர்யா பேன் வேர்ல்ட் ஸ்டாராக மாறப் போகிறார். 2000 கோடியை அடித்து தூக்கும். பார்ட் 2 வரும்போது ஒருத்தர்கூட போட்டிக்கு வர மாட்டாங்க என ஏகப்பட்ட அலப்பறை இருந்தது.

kanguva-memes
kanguva-memes

அதுவும் இந்த விமர்சனங்களுக்கு ஒரு காரணமாகும். பேசாமல் இருந்திருந்தா கூட படம் போகப் போக ஒரு நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும். ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்ற கதிதான் கங்குவாவுக்கு வந்துள்ளது.

kanguva-memes
kanguva-memes

அதிலும் படம் ஆரம்பிக்கும் போது பிரபல நடிகை தன்னுடைய ஸ்டைலில் கத்தி பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அதை தொடர்ந்து படம் முழுக்க ஒரே இரைச்சல் தான். அதனால் தயாரிப்பாளர் கூட தியேட்டர் உரிமையாளர்களிடம் சவுண்டை இரண்டு புள்ளி குறைத்து வைங்க என கோரிக்கை வைத்துள்ளார்.

kanguva-memes
kanguva-memes

இதைக் கூட நெட்டிசன்கள் ஒரு கண்டன்ட்டாக மாற்றி கலாய்த்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்தியாவே திரும்பிப் பார்க்கிற படமா இருக்கும்னு நினைச்சேன்.

kanguva-memes
kanguva-memes

ஆனால் இப்ப இந்தியன் 2 படத்தையே திரும்ப பார்க்கலாம்னு தோணுது என கங்குவா படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி இணையத்தை கலக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் இதோ.

kanguva-memes
kanguva-memes
kanguva-memes
kanguva-memes
- Advertisement -

Trending News