அருண் விஜய் வச்சு போஸ்டர் விட்டும் பயப்படல.. அதான் அடுத்து ஏகே வச்சு டைரக்ட் பண்ண போறேன்னு கொளுத்தி போட்டேன், ட்ரெண்டிங் மீம்ஸ்

memes
memes

Memes: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் தனுஷ் அஜித் செய்திதான் வைரலாகி வருகிறது. தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஏப்ரல் 10 வெளிவரும் என போஸ்டர் வெளியானது.

அதுவும் அருண் விஜய் பாக்சர் லுக்கில் இருக்கும் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் வெளியானது.

வெறித்தனமாக இருந்த இந்த டீசர் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல் இட்லி கடை பின்வாங்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

இன்னொரு பக்கம் அஜித் தனுஷ் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு ஒருவரை ஒருவர் கலாய்த்து வருகின்றனர். இந்த சூழலில் தனுஷ் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதை நெட்டிசன்கள் ஏப்ரல் 10 படம் ரிலீஸ்னு அருண் விஜய் வச்சு போஸ்டர் விட்டும் பயப்படல. அதான் இப்ப இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டு இருக்காங்க.

எல்லாமே வதந்தியா தான் இருக்கும். அதுக்கு வாய்ப்பே கிடையாது என கூறி வருகின்றனர். இருந்தாலும் இந்த செய்தி இப்போது மீம்ஸ் மெட்டீரியல் ஆக மாறி இருக்கிறது.

அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சில இட்லி கடை மீம்ஸ் இதோ.

Advertisement Amazon Prime Banner