திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

டயர்டா இருக்கு டீ போட்டு கொடும்மா.. எத்தனை விசில் வைக்கணும் அத்தை, 2K மருமகள் மீம்ஸ்

Memes: காலம் மாறினாலும் மாமியார் மருமகள் சண்டை மட்டும் மாறவே மாறாது. எப்போதுமே இவர்களுக்குள் ஒரு பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கும்.

memes
memes

அதிலும் இப்போது இருக்கும் மருமகள்கள் எல்லாம் அப்பாவின் குட்டி இளவரசியாக இருக்கின்றனர். சமையல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட சிலருக்கு தெரியவில்லை. சுடுதண்ணி வைப்பேன் என்பதை கூட பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர்.

memes
memes

அது மட்டுமா இப்போது உள்ள காலகட்டத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். எந்த நேரத்திலும் அதை டெலிவரி செய்ய நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. அதனால் இந்த லிட்டில் பிரின்சஸ் மருமகள்கள் காப்பியை கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் குடிக்கின்றனர்.

memes
memes

சில வீடுகளில் ஆண்கள் தான் சமைத்துவிட்டு வேலைக்கு செல்லும் நிலையும் இருக்கிறது. இதை பல டிவி நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக குமுறும் குடும்ப தலைவர்களும் இருக்கின்றனர்.

memes
memes

இது ஒரு விதம் என்றால் மற்றொரு விதம் சமைக்கிறேன் என்ற பெயரில் மருமகள் செய்யும் அட்ராசிட்டி தான். மாமியார் டீ வேணும் என்று கேட்டால் குக்கரில் எத்தனை விசில் வைக்கணும் அத்தை என்று கேட்டு மாரடைப்பு வர வைக்கின்றனர் 2k மருமகள்கள்.

memes
memes

இன்னும் சிலர் மசாலா டீ வேணும் என்று கேட்டால் ஆச்சி மசாலாவா சக்தி மசாலாவா என கேட்கின்றனர். இது நகைச்சுவை மீம்சாக சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. அப்படி நம்மை சிரிக்க வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes
- Advertisement -

Trending News