Memes: வெளிநாட்டிலிருந்து ஒருவர் ஊருக்குள் வந்து இறங்கினால் போதும் உடனே சொந்த பந்தங்கள் மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஏதோ ஃபார்மாலிட்டிக்கு நலம் விசாரித்துவிட்டு கோடாரி தைலம் சாக்லேட் ஏதாவது தேறுமா என பார்ப்பவர்கள் தான் அதிகம்.
களவாணி படத்தில் கூட கடுப்பில் இருக்கும் இளவரசுவிடம் பாட்டி கோடாரி தைலம் எதுவும் இருக்கா என கேட்கும் சம்பவங்கள் நிஜத்திலும் இருக்க தான் செய்கிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் கூட இதைத்தான் மூட்டையாக வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.
இப்படி சில சொந்தக்காரர்கள் ஒரு ரகம் என்றால் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் சிலரும் இருப்பார்கள். யார் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் அட்வைஸ் என்ற பெயரில் கழுத்தறுக்கும் சொந்தமும் உண்டு.
இதனாலேயே இன்றைய தலைமுறை சொந்தக்காரர்கள் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். இதை நெட்டிசன்கள் நகைச்சுவை மீம்ஸ்களாக வைரல் செய்து வருகின்றனர். அதிலும் விசிட் விசாவில் சென்று வேலை கிடைக்காமல் திரும்பியவரிடம் கோடாரி தைலம் கேட்கும் மீம்ஸ் வைரலாகி வருகிறது.
சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்
- பாடம் நடத்துறது P.E.T பீரியட்ல
- இந்த வருஷமாவது தீபாவளிக்கு போனஸ் தருவீங்களா பாஸ்
- தீபாவளியும் வருது மழையும் வருது