Trending Memes: கார் வாங்குவதெல்லாம் ஆடம்பரம் என்ற காலம் இப்போது மாறிவிட்டது. சொந்த வீடு, பைக், கார் இது எல்லாமே அத்தியாவசிய பட்டியலில் இணைந்து விட்டது. அப்பொழுதுதான் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என நடுத்தர வர்க்கத்தினர் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் நாலு இடத்துக்கு போக வர வசதியாக இருக்கும் என கார் வாங்கி போடுவோம். ஆனால் காரை வாங்கிட்டோமேன்னு நாலு இடத்துக்கு போக வேண்டிய நிலைமை வந்துவிடும்.
இப்படித்தான் பல பேரின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் எப்படியோ அடித்து பிடித்து கார் பைக் என வாங்கி விடுவோம். ஆனால் காசு இல்லாத நேரத்தில் தான் அது தன் வேலையை காட்டும்.
இன்ஷூரன்ஸ் சர்வீஸ் என எக்கச்சக்க செலவு வந்து கொண்டே இருக்கும். இதற்கு கார் வாங்காமலேயே இருந்திருக்கலாம் என சிலர் புலம்புவதும் உண்டு. அப்படி கார் வாங்கி படாத பாடு படுவோரை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- புரட்டாசி முடியட்டும் பொங்க வச்சுடுவோம், ட்ரெண்டிங் மீம்ஸ்
- ஆள பாத்தா டம்மி பீசா இருக்க
- ஒன்னு கல்யாண செய்தியா வருது இல்ல விவாகரத்து அறிவிப்பா வருது