திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

யோவ் கத்தாம படத்த பாருங்கப்பா.. கத்துறதே படத்துல தான்யா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: கங்குவா படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஏகப்பட்ட அலப்பறை இருந்தது. ஆனால் அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திரும்பும் பக்கம் எல்லாம் படத்தை ட்ரோல் செய்து மீம்ஸ் பரவி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் படத்தில் இருக்கும் அதிகப்படியான சத்தம் தான். சோசியல் மீடியாவை திறந்தாலே இதை கலாய்த்து தான் ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு வருகின்றனர்.

memes
memes

படத்தை பார்த்த பிறகு காது கேட்கவில்லை தலை வலிக்குது என பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தயாரிப்பாளர் தியேட்டர்களில் சவுண்டை குறைக்க கோரிக்கை வைத்ததும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

memes
memes

எல்லாத்தையும் கூட சகிச்சுக்கலாம் ஆனா இந்த சவுண்டை குறைக்கணும்னு ஐடியா கொடுத்தது யாருன்னு சொல்லுங்க சமாதானமா போயிடலாம் என இதையும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

memes
memes

அதேபோல் ஜோதிகா நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எதிராக அறிக்கை விட்டதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே இவர் தஞ்சை கோவில் பற்றி பேசி சிக்கலில் சிக்கியிருந்தார். அது கூட கங்குவா படத்தின் இந்த நிலைக்கு ஒரு காரணம் என கூறுகின்றனர்.

ஆக மொத்தம் இந்தியன் 2 படத்தை விட மோசமாக இப்படம் கலாய்க்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் பாகம் வேறு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என சொல்கின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் வைரலாகும் சில கங்குவா மீம்ஸ் இதோ.

memes
memes
- Advertisement -

Trending News