கதை, சஸ்பென்ஸ் எல்லாத்தையும் யூடியூப்லயே சொல்லிட்டீங்க.. படத்தையும் அதுலயே விட்டுருக்கலாமே, கோட் ரகளை மீம்ஸ்

Trending Memes: விஜய் நடித்துள்ள கோட் 5ம் தேதி வெளிவர இருக்கிறது. அதற்கான டிஜிட்டல் ப்ரோமோஷன் வேலைகள் அனைத்தும் ஜோராக நடந்து வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என எல்லோரும் படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.

memes-goat
memes-goat

இதில் பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் முக்கிய சஸ்பென்ஸ் அனைத்தையும் உடைத்து வருவதாக விஜய் ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர். சிநேகாவுக்கு நான் தான் தம்பி, விஜய் வரும் காரில் சிஎம் 2026 என்று எழுதப்பட்டிருக்கும்.

memes-goat
memes-goat

இப்படி ரசிகர்களுக்காக வைத்திருந்த ஒவ்வொரு சஸ்பென்ஸ் சீனையும் அவர்கள் உளறி வருகின்றனர். அதேபோல் வெங்கட் பிரபுவிடமும் சிவகார்த்திகேயன் ஒரு சீன்ல வராராமே நீங்க கூட நடிச்சு இருக்கீங்களா என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

memes-goat
memes-goat

இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அவரும் எதையோ சொல்லி எஸ்கேப் ஆகிறார். கோட் படத்தின் பல சீக்ரெட் இந்த பிரமோஷன் மூலம் வெளியாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாத்தையும் யூடியூப்லயே சொல்லிட்டா எதுக்கு தியேட்டருக்கு போகணும் படத்தையும் இதுலயே வெளியிடலாமே என நக்கல் அடித்து வருகின்றனர்.

memes-goat
memes-goat

மேலும் அஜித் வாய்ஸ் தந்ததாக கூட ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது. இப்படி கோட் ஒரு பக்கம் ஆர்வத்தை கிளப்பி இருந்தாலும் பட குழுவினரே அதை சிதைப்பது போன்று சில வேலைகளை பார்த்து வருகின்றனர். அதை கலாய்க்கும் நெட்டிசன்களின் மீம்ஸ் இதோ.

memes-goat
memes-goat
memes-goat
memes-goat

சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்

Next Story

- Advertisement -