Memes: இது செப்டம்பர் மாதமா இல்ல மே மாதம் மாறுவேஷத்தில் வந்து விட்டதா என புலம்பும் அளவுக்கு கடந்த வாரம் வெயில் பாடாய்படுத்தியது. ஆனால் இந்த வாரம் சென்னையின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.
சட சடவென பெய்யும் மழையால் சென்னை இப்போது ஊட்டி போல் குளுகுளுவென இருக்கிறது. இது ஒரு பக்கம் வெயிலால் வாடியவர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் ஒரு பீதியை ஏற்படுத்துகிறது.
கடந்த வருடம் டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்கள் பயத்தில் உறைந்து போய்விடுவார்கள்.
ஆனால் இந்த வருடம் செப்டம்பர் மாதமே மழை பெய்ய ஆரம்பித்து விட்டத. இந்த நேரம் பார்த்து தீபாவளி பண்டிகையும் வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் எப்படி ஷாப்பிங் செல்வது என ஒரு பக்கம் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஆனால் இணையதள வாசிகள் தீபாவளியும் வருது மழையும் வருது பட்டாசு வாங்கலாமா படகு வாங்கலாமா என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர் இரண்டு படகு வாங்கி போட்டா பணக்காரனா ஆயிடலாம் என்றும் நக்கலடித்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சென்னை மழை மீம்ஸ் இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மழை மீம்ஸ்
- ரொம்ப நாள் கழிச்சு பார்த்தா நல்லாருக்கியான்னு கேளுங்கடா
- சைவ லட்டுன்னு நெனச்சு 5% ஜிஎஸ்டி போட்டுட்டோம்
- என்னடா பெரிய லப்பர் பந்து