Connect with us
Cinemapettai

Cinemapettai

India | இந்தியா

சோசியல் மீடியாவில் தப்பு தப்பா பரப்புறாங்க.. ஸ்ரீ ரெட்டி போலீசில் புகார்

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் மக்கள் எனக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். ஆனால் சிலர் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

தெலுங்கு துணை நடிகை ஒருவரும் 50 வயது நிரம்பிய டான்ஸ் மாஸ்டர் ஒருவரும் என்னை பற்றி தரக்குறைவாக பேசி தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

நான் வீடு வாங்கியது குறித்தும் கார் வாங்கியது குறித்தும் எப்படி என்பது என்று கேள்வி எழுப்பி எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளார்கள் என்பது பற்றி எல்லாம் அவதூறாக சொல்கிறார்கள்.

ஆண் நண்பர்கள் விவகாரம் என்பது எனக்கு தனிப்பட்ட விஷயம்.

shree-reddy

shree-reddy

என்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று நான் புகார் மனு அளித்துள்ளேன். சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . புகாருக்கான ஆதாரங்கள் நான் சமர்ப்பித்துள்ளேன்” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top