பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். தற்போது வரும் டாஸ்க் ஒவ்வொன்றும் கடினமானதாக உள்ளது.

ஜெயிக்க வேணும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் பெருகி வரும் நிலையில் ஒவ்வொருவரும் தான் ஜெயித்தால் என்ன செய்வேன் என்று பேசி வருகின்றனர்.

போட்டியாளரில் ஒருவரான சிநேகன் தான் மட்டும் இந்த நிகழ்ச்சியில் ஜெயித்தால் தலைவர் கமலை கொண்டு 100 சிறிய கிராமங்களுக்கு பொதுவாக பயனுள்ள வகையில் ஒரு பெரிய நூலகத்தை திறப்பேன். அந்த நூலகத்திற்கு பிக் பாஸ் நூலகம் என்று பெயர் வைப்பேன் என்று தனது சகப்போட்டியாளரான வையாபுரியிடம் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமான லட்சியத்தை அடைவேன் என்று சொல்லி வரும் வேளையில் சிநேகனின் இந்த சமூக சிந்தனை அனைவரின் பாராட்டையும் சமூக வலைதளங்களில் பெற்று வருகிறது.