சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்..! உற்சாகத்தில் ரசிகர்கள்

சூர்யா தற்போது இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா உடன் பணி புரிய உள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

மேலும் 2டி தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா இப்படத்தில் பணிபுரிய உள்ளார் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் ஆடியோ பணியில் இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற அந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன. மேலும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் வந்தன. தற்போது சினேகன் இந்த படத்திற்கு ஒரு பாடல் எழுத உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது புரச்சிகரமான பாடலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment