12 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான சினேகா.. காட்டுத்தனமாக வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

sneha-cinemapettai
sneha-cinemapettai

திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் உடல் எடை கூடி இருந்த சினேகா மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி எல்லாம் செய்து தற்போது 12 கிலோ வரை உடல் எடையை குறைத்துவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

புன்னகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தான் சினேகா. பார்த்தாலே குடும்ப பெண் போன்ற தோற்றம். இதனாலேயே அவருக்கு பல பட வாய்ப்புகள் கொட்டி குவிய தொடங்கின.

தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்த சினேகா ஒரு கட்டத்தில் கிளாமருக்கும் பச்சைக்கொடி காட்ட கூரையைப் பிரித்து கொட்டியது பட வாய்ப்புகள்.

sneha-slim-photo-cinemapettai-01
sneha-slim-photo-cinemapettai-01

முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் பாரபட்சமின்றி ஜோடி போட்ட சினேகாவுக்கு ஒருகட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது. இதனால் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

sneha-slim-photo-cinemapettai
sneha-slim-photo-cinemapettai

திருமணத்திற்கு பிறகு பெரிய அளவு சினிமாவில் ஆர்வம் காட்டாமல் குடும்பம் குட்டி என இருந்து வந்த சினேகாவுக்கு தற்போது ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் சினேகா.

தற்போது அவருக்கு ஹீரோயின் ஆசை மீண்டும் வந்துவிட்டது போல. மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை 12 கிலோ வரை குறைத்து விட்டார். மீண்டும் ஸ்லிம்மான தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார் சினேகா.

Advertisement Amazon Prime Banner