புன்னகை இளவரசி சினேகா செய்த ஒரு செயலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

குடும்ப பாங்கான நடிப்பு, பக்கத்து வீட்டு பொண்ணு முகம் என கோலிவுட்டில் அறிமுகமானவர் சினேகா. 2001ம் ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிஸி நாயகியாக வலம் வருகிறார். அறிமுகமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததால் பல படங்களில் நாயகியாக நடித்தார். சிம்பு, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இருக்கிறார். 2009ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் நாயகி வாய்ப்பு குறைந்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படங்களில் மட்டுமல்லாமல் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து பல சமூக பிரச்சனைகளிலும் தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறார். டெல்லியில் போராடிய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். இது பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.

சினேகாவின் அழகே அவரின் சிரிப்பும், முடியும் தான். இதற்கே இன்னும் அவருக்கு ரசிகர்களாக பலர் இருக்கிறார்கள். இந்நிலையில், தனது முடியை பாதியாக வெட்டி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்திற்காக இந்த மாற்றமா? இல்லை எதும் நல்ல காரியத்திற்காக செய்தாரா என்ற தகவல்கள் வெளிவரவில்லை. இருந்தும், சினேகாவின் ரசிகர்கள் இதனால் அப்செட்டாகி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.