fbpx
Connect with us

Cinemapettai

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இரண்டு நிமிட காட்சியை வெளியிட்ட ஆர்யா .

Videos | வீடியோக்கள்

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இரண்டு நிமிட காட்சியை வெளியிட்ட ஆர்யா .

ஒரு குப்பை கதை

‘ஒரு குப்பையான விஷயத்தைப் பெரிது படுத்தினால், அந்தப் பிரச்னை வாழ்க்கையின் எவ்வளவு தூரத்துக்குக் கொண்டுசென்று நிம்மதியைக் குலைக்கும்’ என்பதே இப்படத்தின் ஒன்லைன் ஆம். அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

டான்ஸ் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம். நாயகியாக மனிஷா யாதவ் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஜார்ஜ், சுஜா, ஆதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, பாடலாசிரியராக நா.முத்துக்குமார், இசையமைப்பாளராக ஜோஸ்வா ஸ்ரீதர், எடிட்டராக கோபிகிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம், உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்தவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடிப்பைப் பாராட்டியதுடன், ‘சமூகத்துக்கு இதுபோன்ற படங்கள் இப்போதைய அவசியத் தேவை’ என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தியதோடு, ‘ஒரு குப்பைக் கதை’ படத்தைத் தானே வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.

இப்படத்தை மே 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு இப்படத்தின் ஸ்னீக் – பீக் வீடியோவை ஆர்யா வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top