ரிச்சி

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி (எ) நடராஜ், பிரகாஷ் ராஜ், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ஜி.கே.ரெட்டி, முருகதாஸ், ராஜ்பரத், துளசி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “ரிச்சி”. கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் படமான “உலிடவாறு கண்டந்தே” எனும் படத்தின் ரீமேக் தான் ரிச்சி.

இப்படத்தின் ஸ்னீக்- பீக்  வீடியோ இன்று வெளியிட்டனர் படக்குழு.

சத்யா

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தொடர்ந்து சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் ’சத்யா’. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்தராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் 8ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. ஸ்பென்ஸ் த்ரில்லர் படமான சத்யா தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘க்‌ஷணம்’ படத்தின் ரீ-மேக் ஆகும்.

இப்படத்தின் நான்கு நிமிட வீடியோ இன்று வெளியிட்டனர் படக்குழு.