படுக்கையில் ஒய்யாரமாக படுத்துகிடந்த பாம்பு.. நல்லவேளை யாருமில்ல

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் சீலிங்கில் இருந்து படுக்கையில் தவறி விழுந்த மலைப்பாம்பு படுக்கையில் ஒய்யாரமாக படுத்துகிடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டின் சீலிங்கில் வெளிச்சத்திற்கு லைட் வைத்துள்ளார்கள் . அதன் வரியாக வீடடுக்குள் வந்த மிகப்பெரிய மலைப்பாம்பு அப்படியே பொத்தென்று படுக்கையில் விழுந்தது. அப்படியே ஒய்யாரமாக படுத்து சோம்பேறி போல் படுத்துகிடந்துள்ளது.

நல்ல வேளையாக அப்போது படுக்கையில் யாரும் இல்லாததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. படுக்கையில் பாம்பை கண்ட குடும்பத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து மலைப்பாம்பை அகற்றினர்.

அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

snake
snake
snake
snake
snake
snake

Leave a Comment