fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் ராக்கர்ஸை விட பெரும் கொள்ளையடித்த Smule! தடுத்து நிறுத்திய இளையராஜா..

News | செய்திகள்

தமிழ் ராக்கர்ஸை விட பெரும் கொள்ளையடித்த Smule! தடுத்து நிறுத்திய இளையராஜா..

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இணையத்தில் தற்போது சூடான விவாதப்பொருளாக இருப்பது smule செயலியில் இளையராஜாவின் பாடல்கள் கிடைக்காமல் செய்யும் அவரது copyright claim.

இளையராஜா அவர்கள் smule செயலி மீது தொடுத்திருக்கும் போர் பல நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்று, தற்போது காலம் கடந்து நடந்திருக்கிறது பிற இசையமைப்பாளர்களும் இளையராஜாவை தொடர்ந்து களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது.Ilayaraja_Srilanka_Music_Trip

விளையாட்டாக மக்கள் Smule செயலியில் உள்ள karaoke இசையில் பாடி மகிழ்ந்தாலும், smule முழுக்க முழுக்க அடுத்தவன் உழைப்பை திருடி பணம் சம்பாதிக்கும் அடிப்படையில் தான் இயங்குகிறது.இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள் வாசிப்பாளர்கள், தயாரிப்பாளர் என பலரின் உழைப்பால் உருவாகும் இசையை திருட்டுத்தனமாக பதிவிறக்குவது மட்டுமன்றி அதை காசை வாங்கிக்கொண்டு பிறருக்கு விற்பது எத்தனை பெரிய சுரண்டல்.

அவர்களின் படைப்பை இப்படி திருட்டுத்தனமாக சந்தைப்படுத்த அவர்களிடம் எவ்வகையிலும் முன்னனுமதி பெறுவதில்லை என்பது தான் அதிர்ச்சிகரமான உண்மை.

தமிழ் ராக்கர்ஸ் அதன் திருட்டு பிரிண்ட்டுகளை காசு கொடுத்து பதிவிறக்க சொன்னால் எத்தனை மொள்ளமாறித்தனமாக இருக்குமோ அதைத்தான் smule இத்தனை நாளாக சத்தமே இல்லாமல் செய்து வந்திருக்கிறது.

நியாயமாக Smule அதன் லாபத்தின் ஒரு பங்கை அதன் உண்மையான உரிமையுள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அது வரையில் அதில் தங்கள் பாடல்கள் வராமல் தடுப்பதே வளர்ந்த இசையமைப்பாளர்களுக்கு பயன் தரும் முடிவாக இருக்கும்.

இசை வாசிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள் என பலருக்கு இந்த copyright கிளைய்ம்களின் மூலம் சீரான வருமானம் வரும் வகையில் AR Rahman தனது பாடல்களின் அனைத்து காப்பிரைட் உரிமைகளையும் தன்னிடமே வைத்துக்கொள்கிறார்.
இளையராஜா அவர்கள் maestros மியூசிக் எனும் செயலி மூலம் தான் பாடல்களையும் அதை வர்த்தக நோக்கில் பாடும் பிறரது இசை நிகழ்வுகளையும் ஒரே குடையில் தொகுக்கிறார்.

காப்பிரைட் என்பது நாம் ரசிக்கும் கலைபொருட்களை உருவாக்கிய கலைஞர்களை காப்பாற்றும் ஒரு முக்கிய ஆயுதம், கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலை வாழும்.

காப்பிரைட்டை இனிமேலும் தவறான பார்வையில் மட்டுமே பார்க்கவேண்டமே…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top